வெள்ளகோவில் அரசு பள்ளி 3 மாணவிகள் திடீர் மாயம் - அதிகாலையில் மீட்ட வெள்ளகோயில் காவல்துறை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வெள்ளகோவில் அரசு பள்ளியில் படிக்கும் 3 மாணவிகள் காணமல் போனதையடுத்து காலையில் ஒட்டன்சத்திரத்தில் வெள்ளகோவில் காவல்துறையினர் மீட்டனர்.
Update: 2024-03-10 14:00 GMT
காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் மாயமாகியுள்ளனர். விகாஷினி மற்றும் ஸ்ரீ பிரியா இருவரும் அருகிலுள்ள அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை பெண்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். மோனிகா மட்டும் வெள்ளகோவில் நடேசன் நகர் பகுதியில் பெற்றோருடன் குடியிருந்து கொண்டு தினமும் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி முடித்து விடுதி மற்றும் வீட்டிற்கு செல்லும் மாணவிகள் செல்லவில்லை. இதை அடுத்து விடுதி வார்டன் சுசீலாதேவி. 2 மாணவிகளும் பள்ளி முடிந்து வரவில்லை என தேடிய நிலையில் வீட்டிலிருந்து வந்த மாணவியும் மாயமானது வெள்ளகோவில் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 3 மாணவிகள் பள்ளி முடித்து விடுதிக்கும் வீட்டிற்கும் செல்லாமல் மாயமானது வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காணாமல் போன மாணவிகளின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது. இந்த வேலையில் பள்ளியின் நிர்வாகம் காணாமல் போனவர்கள் குறித்து நேற்று இரவு நிலவு காவல் துறையில் புகார் கொடுத்திருந்தனர். இதன் பின்னர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மூன்று மாணவிகளும் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் மாணவிகளை மீட்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.