வெள்ளாண்டி வலசு காளியம்மன் கோயில் பூமிதி திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்

எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் மாசி மாத மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில் பண்டிகை

Update: 2024-02-22 06:23 GMT

 பூமிதி திருவிழா

சேலம் மாவட்டம் எடப்பாடி காளியம்மன் கோவில் பண்டிகை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தும், அழகு குத்தியும், நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம் மாவட்டம் எடப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாசி மாத பண்டிகையான மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெள்ளாண்டி வலசு,தாவாந்தெரு, ஸ்ரீ ஓம் சக்தி காளியம்மன் கோவில் பண்டிகை கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி பக்தர்கள் கங்கணம் கட்டி விரதமிருந்து வந்தனர். பண்டிகை நாளான இன்று அதிகாலையில் சரபங்கா ஆற்றங்கரையோரம் பூங்கரகம் ஆலங்கரித்து பூஜை செய்து அலகு குத்தி, பூங்கரகம் எடுத்து வந்தும் இதில் பெண்கள்,சிறுவர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கூட்ட  அதிகமாக இருந்ததால் எடப்பாடி காவல்துறையினர் 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
Tags:    

Similar News