வெள்ளனூர் கோயில் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் அழகு நாச்சியார் கோவில் தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-02-08 09:10 GMT

தேரோட்டம் 

புதுக்கோட்டை திருக்கோயில்களை சேர்ந்த வெள்ளனூர் அழகு நாச்சியம்மன் கோயிலில் தேர் திருவிழா கடந்த மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மண்டக்கா படித்தார்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வீதி உலா நடந்து வந்தது.

ஒன்பதாம் நாளான முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் அழகு நாச்சியம்மன் எழுந்தருளியதும் வெள்ளனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோடும் வீதிகளை வலம் வந்த தேர் நிலைக்கு வந்தது.

தேர்த்திருவிழாவில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், செயலாளர். முத்துராமன், ஆய்வாளர் யசோதா, இளநிலை பொறியாளர் பாலசுப்ரமணியன், கோயில் மேற்பார்வையாளர் மாரிமுத்து, எம்எல்ஏ சின்னத்திரை மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News