போலீசாரின் சோதனையில் 195 கிலோ குட்கா பறிமுதல்

சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

Update: 2024-02-25 18:17 GMT

வாகன சோதனையில் குட்கா பறிமுதல்

வேலூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 195 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் இன்று 2 மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 67 மதுபாட்டில்கள மற்றும் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.  மது பாட்டில்களையும், 78,000 ரூபாய் மதிப்புடைய சுமார் 195 கிலோ குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News