படைவீரர் கொடிநாள் விழா
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொடிநாள் விழாவில், முன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
டிசம்பர் 7ம் தேதி, மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மகாபாரதி தலைமையில் , படைவீரர் கொடிநாள் விழா நடைபெற்றது.
உண்டியலில் பணம் , செலுத்தி கொடிநாள் வசூலினை துவக்கி வைத்தார். இக்கொடிநாள் விழாவின்போது வசூல் செய்யப்படும் தொகையானது, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்காக, செலவிடப்படுகிறது. முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் 7 முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையும், 3 நபருக்கு வங்கிக்கடன் ,வட்டிமானியமும், 3 முன்னாள் படைவீரரின் சார்ந்தோர்களுக்கு ஈமச்சடங்கு நிதியுதவியும், 3 முன்னாள் படைவீரரை சார்ந்தோர்களுக்கு, கண்கண்ணாடி நிதியுதவியும் என, மொத்தம் 16 பயனாளிகளுக்கு சுமார் ரூ.1,41,024 மதிப்பிலான ,நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை , முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் ராகவேந்திரன் மற்றும் அனைத்து அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.