விஜய் ரசிகர்கள் கொளத்தூரில் 1,000 பேருக்கு அன்னதானம்
தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கியதை முன்னிட்டு டி.கொளத்தூர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-09 09:27 GMT
விஜய் ரசிகர்கள் கொளத்தூரில் 1,000 பேருக்கு அன்னதானம்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய இளைஞரணி தலைமை சார்பாக நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கியதை முன்னிட்டு டி.கொளத்தூர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் ஜி.பி.சுரேஷ் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் கே.முருகன், டி.கொளத்தூர் கிளை தலைவர்கள் சக்திவேல், அருணகிரி, ஒட்டனந்தல் கிளைத்தலைவர் சிவபூசனம், சங்கர் மற்றும் நிர்வாகிகள் ஏழுமலை, சாரங்கபாணி, மருதமலை, ஜெயபால், சிவராஜ், திருநாவுக்கரசு, ரீகன், சரவணன், ஜெயசங்கர், அன்பு, சிலம்பரசன், பாஸ்கரன், குப்புசாமி, லட்சுமணன், சஞ்சீவி, பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.