விஜயபுரம் அரசு தாய் சேய் மருத்துவமனையினை எம்எல்ஏ ஆய்வு

தொடர் மழையால் விஜயபுரம் அரசு தாய் சேய் மருத்துவமனையில் புகுந்த மழைநீரை அகற்றும் பணியை சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2024-01-10 01:33 GMT

மழைநீர் வெளியேற்றும் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் திருவாரூர் விஜயபுரம் அரசு தாய் சேய் மருத்துவமனையில் கனமழை காரணமாக தண்ணீர் புகுந்தது. இதனை தொடர்ந்து அவசரமாக 25க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மருத்துவமனையில் தேங்கிய தண்ணீரை மோட்டார் இயந்திரம் வைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டார் .இந்த ஆய்வில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News