விக்கிரவாண்டி : திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
கப்பியாம்புலியூரில் பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அமைச்சர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
Update: 2024-07-05 07:47 GMT
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் களப்பணியின் போது கப்பியாம்புலியூர் பகுதியில், மாற்று கட்சியில் இருந்து திமுகவில் நூறுக்கும் மேற்ப்பட்டோர் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் M.R.K.பன்னீர்செல்வம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலையில் இன்று( ஜூலை 5) திமுகவில் இணைந்தனர். உடன் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மற்றும் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் இருந்தனர்.