விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை

ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-12-24 12:13 GMT

பேச்சுவார்த்தை நடத்தும் போலீசார்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் வாக்கூர் மதுரா எஸ்.எஸ்.ஆர். பாளையம் கிராமத்தில் உள்ள தாங்கல் ஏரி நீர் பிடிப்பு பகுதியை சிலர் ஆக்கிரமித்து விவசாய பணிகள் செய்து வருவதாக கிராம மக்கள் மத்தி யில் புகார் எழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஆக்கிர மிப்புகளை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால், மீண்டும் தாங்கல் ஏரி நீர்பிடிப்பு பகுதியை சிலர் ஆக்கிர மித்து பயிர் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த எஸ்.எஸ்.ஆர். பாளையம் கிராம மக்கள் 60-க்கும் மேற்பட்டோர் நாட்டாண்மை நந்தகோபால் தலைமையில் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் ஒன்று திரண்டனர்.

பின்னர், தாங்கல் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கிருந்த போலீஸ் ஏட்டுகள் கலை வாணன், செல்வகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில், அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News