தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் இறங்கிய கிராமம்

சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் பொன்னாங்கண்ணி என்ற கிராமத்தில் தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுப்பட்டனர்.

Update: 2024-04-12 09:18 GMT

சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் பொன்னாங்கண்ணி என்ற கிராமத்தில் தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுப்பட்டனர்.

கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் பொன்னாங்கண்ணி என்ற கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.கிராமத்தில் உள்ள பெரும்பாலான விலை நிலங்கள் மற்றும் விவசாய நிலங்கள் ஆகியவை ஆக கொடுக்கப்பட்டதாகவும் அந்த நிலங்களை வாங்கவோ,விற்கவோ முடியாது என அறநிலையத்துறை சார்பில் சமீபத்தில் தகவல் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் அவர்களுடைய இருப்பிடத்தை விற்க முடியாமல் இருந்து வருகிறார்கள்.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்ட போதும் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் இருந்து வருவதாக கூறி இப்பகுதி மக்கள் தங்களுடைய நிலங்களின் உரிமையை உறுதி செய்திட கோரி கருப்புக்கொடி ஏந்தி தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.மேலும் தேர்தல் நாள் வரை வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் செய்வது எனவும் தேர்தலை புறக்கணிப்பது எனவும் முடிவெடுத்துள்ளனர்.அதற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் விதமாக அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு நிலங்களை உரிமை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து விவசாய பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த மந்திராச்சலம் கூறுகையில் இங்குள்ள விளைநிலங்களை பூஜியம் மதிப்பு செய்ததனால் இங்குள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் குறிப்பாக விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.அவர்களின் நில உரிமையை பெற்று தருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறநிலை துறை இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படும் கூடாது என்றவர் அதற்கான உரிமையும் அவர்களிடம் இல்லை எனவும் இது முழுமையாக உரிமையியல் பிரச்சனை என்பதால் உரிமையியல் நீதிமன்றம் தான் இதனை விசாரிக்க வேண்டும் என்றார்.

இனாமாக கொடுக்கப்பட்ட நிலங்கள் கோயில் நிலங்கள் என அறநிலையத்துறை சொந்தம் கொண்டாடி வருவதாகவும் அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்த போராட்டமானது அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் என தெரிவித்தார். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த தேவி என்ற பெண்மணி கூறும்போது இனாமாக கொடுக்கப்பட்ட நிலங்களை கோயில் நிலங்கள் எனக் கூறி அறநிலைத்துறை எங்களுடைய நிலங்களை அபகரித்து வைத்துள்ளது எனவும் எங்களுடைய நிலங்களை விற்கவோ கடன் வாங்கவோ எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் இருந்து வருகிறோம் என்றவர் இதுகுறித்து எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவாக இல்லை என்பதால் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News