வட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம மக்கள் போராட்டம்

செண்பகாபுரம் கிராம மக்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டம்

Update: 2023-12-07 06:28 GMT

செண்பகாபுரம் கிராம மக்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெரியூா் ஊராட்சிக்குள்பட்டது செண்பகாபுரம் கிராமம். இந்தக் கிராமத்தில் 129 குடும்ப அட்டைகள் உள்ளன. இவா்கள் ரேஷன் பொருள்கள் வாங்க சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள பெரியூா் நியாயவிலைக் கடைக்கு செல்லவேண்டிய சூழல் உள்ளது. இதனால் பொருள்கள் வாங்க மிகுந்த சிரமத்துக்குள்ளாவதாகவும், கூலி வேலை முடிந்து ரேஷன் பொருள்கள் வாங்க செல்லும் போது கடை மூடியிருப்பதாகவும் கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். இதனால் செண்பகாபுரத்தில் தனியாக நியாயவிலைக்கடை அல்லது பகுதி நேர நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி கிராம மக்கள் ரேஷன் அரிசியை தரையில் கொட்டி சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
Tags:    

Similar News