வாசலில் கோலமிட்டு அதிமுக வேட்பாளருக்கு கிராம மக்கள் வரவேற்பு
மயிலாடுதுறை பகுதியில் அதிமுக வேட்பாளர் பாபுவிற்கு வாசலில் கோலமிட்டு மலர்தூவி கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.;
Update: 2024-03-31 05:33 GMT
ஆரத்தி எடுத்து வரவேற்பு
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. வேட்பாளர்கள் களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபு மயிலாடுதுறையில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆனந்த தாண்டவபுரம் , மணல்மேடு , பட்டவர்த்தி , தலைஞாயிறு , சித்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று இரட்டை இலை சின்னத்தில் தனக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் ஆதரவைத் திரட்டினார். அப்போது திருவாளப்புத்தூர் பகுதிக்கு வந்த வேட்பாளருக்கு பெண்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சாலை முழுவதும் தண்ணீர் தெளித்து அவசர அவசரமாக வேட்பாளரை பார்த்ததும் கோலமிட்டு மலர் தூவி பெண்கள் வரவேற்றனர்.