விழுப்புரம் : கிறிஸ்துவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிருஸ்துவ ஆலயங்களிலும் இன்று குருத்தோலை பவனி நடைபெற்றது.
உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் உயிர்த்தெழுதலை தியானிக்கும் வகையி ல் 40 நாட்கள் தவக்காலம் கடை ப்பிடிப்பது வழக்கம். இதன் அடிப்படையி ல் தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெறுகிறது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து வீ திகளின் வழியாக ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
அப்போது வழிநெடுகிலும் மக்கள் ஆலிவ் இலைகளை கையில் பிடித்து கிறிஸ்துவ பாடல்களை பாடினர். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையி ல் கிறிஸ்துவர்கள் குருத்தோலை திருநாளை கடைபிடித்து வருகின்றனர்.
இதனையொட்டி இன்று காலை விழுப்புரம் டவுன் காவல் நிலையம் அருகே உள்ள டிஈஎல்சி சர்ச், புதுவை சாலையில் உள்ள கிருஸ்து அரசர் ஆலயம் மற்றும் தூய ஜேம்ஸ் ஆலயம், கல்பட்டு புனித வனத்து சின்னப்பர் ஆலயங்களில் குருத்தோலைகளை கையி ல் ஏந்தி ய வண்ணம் கிறிஸ்துவ பாடல்களை பாடியபடி பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பவனியாக சென்றனர்.