குடும்ப நல அறுவை சிகிச்சையில் மாநில அளவில் விழுப்புரம் 2-வது இடம்

Update: 2023-11-24 04:08 GMT
மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மாநில அளவில் குடும்ப நல அறுவை சிகிச்சையை அதிகளவில் மேற்கொண்டதற்காக விழுப்புரம் மாவட்டம் 2-வது இடம் பிடித்ததை தொடர்ந்து, சென்னையில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால், விழுப்புரம் மாவட்டகுடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் மணிமேகலை, சுகாதரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், விழுப்புரம் தலைமை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) ரகுநாத், செஞ்சி தலைமை மருத்துவ அலுவலர் பிரசாத், முகையூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார் ஆகியோருக்கு கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து குடும்பநல துணை இயக்குனர் டாக்டர் மணிமேகலை, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில் குமார் ஆகியோர் மாவட்ட கலெக்டர் சி.பழனியை நேரில் சந்தித்து கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லட்சுமணன், விழுப்புரம் தலைமை மருத்துவ அலுவலர் ரகுநாத், செஞ்சி தலைமை மருத்துவ அலுவலர் பிரசாத், முகையூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News