விழுப்புரம்: சாலையில் தேங்கும் கழிவுநீர்

சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.

Update: 2024-06-18 14:10 GMT

வாகன ஓட்டிகள் அவதி

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள சுதாகர் நகர் பிரதான சாலை, திருச்சி சாலையில் இருந்து நகரப் பகுதிக்கு செல்லும் முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது. இதன் வழியாக ஏராளமான வாகனங்கள் கே.கே.ரோடு சென்று நகர பகுதிக்கு செல்கின்றது.

இந்த சுதாகர் சாலையில், தொடக்கத்தில் சாலை தாழ்வாக இருப்பதால், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி சாலை சேதம் அடைந்து, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த வகையில், அங்கு சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து பெறும் பாதாள பள்ளமாக ஏற்பட்டு, கடந்து 6 மாதங்களாக சீரமைக்காமல் போடப்பட்டுள்ளது.இந்த நிலையில், அண்மையில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு குளம் போல் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.

அந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அதில் விழுந்து செல்வதும், சாக்கடை கழிவு நீர், மழை நீரும் தேங்கி, நடந்து செல்வதற்கு வழியின்றி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.சாலையில் ஏற்பட்டுள்ள அந்த பள்ளத்தை சீரமைத்தும், தாழ்வாக உள்ள 50 மீட்டர் தொலைவிற்கு சாலையை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல் கே.கே. ரோடு அண்ணாநகர் பகுதிக்கு அருகே சாலையில் ஏற்பட்டு மெகா பள்ளமும் நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல், குண்டும், குழியுமாக தொடர்ந்து வருவதால், அந்தப் பகுதியில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு செல்கின்றனர்.

இரவு நேரங்களில், பைக்குகள் மோதி விபத்துக்குள்ளாகும் நிலை தொடர்ந்து வருகிறது. சாலாமேடு, திருப்பாச்சனூர், தளவனூர் கிராமங்களுக்கான முக்கிய சாலையாக இருப்பதால், அந்தப் பகுதி சாலையை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News