இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்ட மாநாடு
விழுப்புரத்தில் நடந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்ட மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விழுப்புரம் வட்ட 16வது மாநாடு விழுப்புரம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு முதலிவீரன்(எ)மணிகண்டன் தலைமை தாங்கினார், முன்னதாக தமுஎகச மாவட்ட செயலாளர் மதுசுதன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார், மாநாட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரகாஷ் மாநாட்டை தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார்.
மாநாட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் சிங்காரவேலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் மூர்த்தி, கட்சி வட்ட செயலாளர் கண்ணப்பன், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்ட தலைவர் அம்பிகாபதி, கட்சி வட்ட குழு உறுப்பினர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்தி பேசினர். வாலிபர் சங்க வட்ட செயலாளர் தேவநாதன் வேலை அறிக்கை வாசித்தார். வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அறிவழகன் நிறைவுரையாற்றினார்.
டிஎன்பிசி குரூப்-4 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடித்து, நாளும் அதிகரிக்கும் சாலை விபத்துகளை தடுக்க வேண்டும், விழுப்புரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனையை தடுத்து இளைஞர்களின் வாழ்வை பாதுகாக்க வேண்டும். அன்றாடம் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க வேண்டும். கல்வி, வேலை, சுகாதாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றனர். மாநாட்டில் விழுப்புரம் வட்ட புதிய தலைவராக மதன்ராஜ், செயலாளராக ஜீவானந்தம், பொருளாளராக அஜய், துணைத்தலைவராக பழனிவேல், துணைச்செயலாளராக குணா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.