விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் கல்லூரி ஆண்டு விழா

விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் கல்லூரி ஆண்டு விழா. சிறந்த மாணவர்களுக்கு பரிசு.

Update: 2024-04-11 05:06 GMT

கல்லூரி ஆண்டு விழா

சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா அன்னபூரணா கலையரங்கில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக சேலம் இரும்பாலை ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா பொது மேலாளர் முருகபூபதி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார். இயக்குனர் ராமசாமி, சேலம் மெட்ரோ தலைவர் சுரேஷ்குமார், கல்லூரியின் முதல்வர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் செல்வம் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரியில் ஒளியூட்டும் விளக்குகள் அனைத்தும் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றியதற்கும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கல்வியை வழங்குவதை பாராட்டி ஜே.சி.ஐ. சேலம் மெட்ரோ சார்பில் கல்லூரிக்கு கிரீன் கேம்பஸ் விருதை, சேலம் மெட்ரோ தலைவர் சுரேஷ்குமார் கல்லூரி முதல்வரிடம் வழங்கினார். கல்லூரி தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற 102 மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் சிறப்பாக பாடம் எடுத்த 91 போராசிரியர்களுக்கும், ஆராய்ச்சி கட்டுரைகள் மேற்கொண்ட 17 பேராசிரியர்களுக்கும் சான்றிதழ், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
Tags:    

Similar News