பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு நிரந்தர வேலை வழங்க ஆலோசிக்கப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பட்டாசு ஆலை வெடிவிபத்து ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அமைச்சர்

Update: 2024-02-18 18:08 GMT
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்ச ரூபாய் மற்றும் தொழிலாளர் நல வாரியத்தில் இருந்து இரண்டு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் என 5 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வழங்கியதாக தெரிவித்தார்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நிரந்தர வேலை வேண்டும் எனவும் மனு அளித்து இருப்பதாகவும், இந்த கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆலோசித்து காலை உணவு திட்டம் மற்றும் அங்கன்வாடியில் சமையல் பணிக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் துறை அமைச்சர் கே.கே எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியபோது, பட்டாசு ஆலை விபத்துகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகமும் அரசும் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இருப்பினும் எதிர்பாராத விதமாக மனித தவறுதலால் பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்படுவதாகவும், இன்னும் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விபத்துக்கள் குறைக்கப்படும் என்றார். 

மேலும், பட்டாசு விபத்துக்கள் ஏற்படும் ஆலைகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றதுடன் பட்டாசு ஆலைகளில் விபத்து இல்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News