பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலி - நிவாரண தொகையை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் அறிவித்த தலா ரூ.3 லட்சம் நிவாரணம் உதவி வழங்கிய அமைச்சர்

Update: 2024-02-18 18:20 GMT
நிவாரண தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ராமு தேவன் பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் பணிபுரிந்த 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் மற்றும் காயம் அடைந்தவர் களுக்கு ஒரு லட்சமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் நிதியிலிருந்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த பத்து பேரின் குடும்பங்களை நேரில் சந்தித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சர் அறிவித்து இருந்த மூன்று லட்ச ரூபாய் மற்றும் தொழிலாளர் நல வாரியம் மூலம் 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் என 5 லட்சத்து 5 ஆயிரம் காசோலையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Tags:    

Similar News