பாடல் பாடியவாறு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள்..!
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாடல் பாடி எதிர்ப்பு தெரிவித்த வருவாய் துறையினர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நூதன முறையில் பாடல் பாடியவாறு காத்திருப்பு போராட்டத்தில் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலக சங்கத்தினர் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணி இறக்க பாதுகாப்பு அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 27ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.
அதன் 3ஆம் கட்ட போராட்டமாக இரவு பகலாக காத்திருப்பு போராட்டத்தில் வருவாய்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த 27ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் தமிழக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் நூதன முறையில் பாடல் பாடி தங்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வலியுறுத்தினர்.