பூதம்பாடியில் நேரில் சென்று நலம் விசாரிப்பு
கடலூர் மாவட்டம், பூதம்பாடி பகுதியில் விபத்தில் காயமடைந்த பாமக நிர்வாகியை சந்தித்து மாவட்ட செயலாளர் நலம்விசாரித்தார்.
Update: 2024-05-27 01:35 GMT
குறிஞ்சிப்பாடி வட்டம், பூதம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி சண்முகம் விபத்தில் சிக்கி காயம் அடைந்து மருத்துவமனையில் நீண்ட சிகிச்சைக்கு பின் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன், பாமக முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.