அயோத்தி ராமர் கோவில் புனித அட்சதை விழுப்புரம் வருகை

Update: 2023-12-11 01:30 GMT
அயோத்தி ராமர் கோவில் புனித அட்சதை, விழுப்புரம் வருகை பக்தர்கள் வழிபாடு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து புனித அட்சதை, அகில இந்திய அளவில் அயோத்தி ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளையின் சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரத்திற்கு கொண்டு வரப்பட்ட புனித அட்சதையை, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள் மற்றும் நகரங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் சன்னதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேலமங்கலம் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசிஉரை வழங்கி அனைத்து ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு அட்சதை கலசத்தை வழங்கினார்.

அதனை தொடர்ந்து விஸ்வ இந்து பரிஷத்தின் வடதமிழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் ராமன் சிறப்புரையாற்றினார். முன்னதாக விழுப்புரம் சங்கரமடத்தில் இருந்து அந்தந்த மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், ராமர் கோவிலின் அட்சதை அடங்கிய கலசத்தை கையில் சுமந்து ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இதில் விஸ்வ இந்து பரிஷத் கோட்ட அமைப்பாளர் துரை பாரதிராஜா, மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, ராமர் கோவில் புனித அட்சதை கமிட்டியின் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ராஜ் நந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News