"மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி களப்பயிற்சி"

காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ். சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தொழிற்கல்வி களப்பயிற்சி வழங்கப்பட்டது;

Update: 2024-01-23 06:07 GMT
"மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி களப்பயிற்சி"


காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ். சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தொழிற்கல்வி களப்பயிற்சி வழங்கப்பட்டது


  • whatsapp icon
காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ். சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், அடிப்படை இயந்திரவியல் பிரிவில் பயிலும் 31 மாணவர்களுக்கு கள பயிற்சி மற்றும் தொழிற்சாலை பார்வைக்காக, ஒரகடத்தில் உள்ள அங்கு டென்னிகோ ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலைக்கு சென்றனர். தொழிற்கல்வி ஆசிரியர்கள் திவாகர், அனந்தகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், தொழிற்கல்வி சார்ந்த கள பயிற்சிக்காக, ஒரகடம் சென்ற மாணவர்களின் வாகனத்தை காஞ்சிபுரம் மாவட்ட உதவி திட்ட அலுவலர் தனசேகரன் வாழ்த்துரை வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் ராஜா, அருள்தாஸ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் ஞானமுரளிதரன் நன்றி கூறினார்."
Tags:    

Similar News