பொதுமக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதி கொடுத்த தன்னார்வலர்கள்!

மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் மனு எழுத உதவிய தன்னார்வலர்கள்.

Update: 2024-03-11 06:44 GMT

மனு எழுத உதவிய தன்னார்வலர்கள்

கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இந்நாளில் நூற்றுக்கணக்கான மக்கள் அவர்களது மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளிப்பர். இவ்வாறு மனுக்களை அளிக்க வரும் பெரும்பாலான மக்கள் எவ்வாறு மனு எழுதுவது என தெரியாதவர்களாகவே இருக்கின்றனர். அப்படிப்பட்ட மக்களுக்கு மனுக்களை எழுதி தருவதற்கு தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வாரந்தோறும் வருகை தந்து இலவசமாக எழுதி தருகின்றனர்.இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனுக்களை எழுதி தருவதால் பெரும்பாலான மக்களுக்கு அது தெரியாமல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியில் பணம் கொடுத்து மனுக்களை எழுதி செல்கின்றனர். இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தின் வெளியில் இருப்பவர்கள் மனுக்கள் எழுதுவதற்கு அதிகமான பணம் கேட்பதாக கடந்த சில நாட்களாக புகார்கள் எழுந்து வந்தன.இதனையடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்குள் இலவசமாக எழுதித்தருபவர்களை மாவட்ட நிர்வாகம் தற்பொழுது ஆட்சியர் அலுவலகத்தின் வெளியில் தன்னார்வலர்கள் மூலம் இலவசமாக பொதுமக்களுக்கு மனுக்களை எழுதிக் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.இதனால் பொதுமக்கள் பலரும் இலவசமாக மனுக்களை எழுதி செல்கின்றனர்.
Tags:    

Similar News