வாக்கு பெட்டி வைத்து அனுப்பும் பணி !
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் ஜி கிரியப்பனவர் மேற்பார்வையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டி வைத்து அனுப்பும் பணி நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-04-05 06:50 GMT
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் தபால் ஓட்டுக்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் 12 மூலம் விருப்பம் தெரிவித்துள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருடைய வீடுகளுக்கு முதல்கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு அலுவலர்கள் குழுவானது நேரில் சந்தித்து தபால் வாக்கு பெற உள்ளனர். இன்று திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர் மேற்பார்வையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டி வைத்து அனுப்பும் பணி நடைபெற்றது.