ஒசூரில் ஓட்டலில் ஆம்லெட் போட்டு குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

ஒசூரில் ஓட்டலில் ஆம்லெட் போட்டு, துண்டறிக்கைகளை வழங்கி குக்கர் சின்னத்திற்கு சுயேச்சை வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-09 09:45 GMT

ஆம்லெட் போட்ட சுயேட்சை வேட்பாளர்

ஒசூரில் ஓட்டலில் ஆம்லெட் போட்டு, துண்டறிக்கைகளை வழங்கி குக்கர் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்த சுயேச்சை வேட்பாளர் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய சமூகநீதி கட்சியின் சார்பில், அந்த அமைப்பின் தலைவர் வெங்கடேஷ் குமார் அவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார்..

அவருக்கு தேர்தல் ஆணையம் "பிரஷர் குக்கர்" சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும்நிலையில் இன்று ஓசூர் மாநகராட்சி, ராம்நகரில் உள்ள கடைகள் தோறும் துண்டறிக்கைகளை வழங்கி பிரஷர் குக்கர் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டார்,

அப்போது ஓட்டலில் ஆம்லெட் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வாக்குகளை கேட்டார்.. பின்னர் பேட்டியளித்த வெங்கடேஷ் குமார்: ஒசூரில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது.. தொழில் நகரமான ஒசூருக்கு போதுமான ரயில்வே போக்குவரத்து இல்லாமல் உள்ளது மன ஓய்விற்காக பெரியவர்களுக்கும்,

குழந்தைகளுக்கு நேரத்தை செலவிட சுற்றுலா போன்ற எவ்வித திட்டமும் இல்லாத நிலையில் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் குடியிருந்து வரும் வீடுகளுக்கு இலவச பட்டா உள்ளிட்ட 25 வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதியளித்தார்

Tags:    

Similar News