மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு !

Update: 2024-04-01 09:58 GMT

தயாநிதி மாறன் 

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வாக்கு சேகரித்தார். எழும்பூர் வடக்கு பகுதி 99அ வட்டத்தில் உள்ள வெங்கட்டம்மாள் சமாதி தெரு வழியாக, பொன்னன் தெரு, ரத்தினசபாபதி தெரு, கந்தப்பா தெரு, தாண்டவன் தெரு, வீராசாமி தெரு, சோலையம்மன் கோயில் தெரு, பெருமாள் தெரு, சுந்தரம் தெரு வழியாக, பார்த்தசாரதி தெரு, சண்முகராயன் தெரு வழியாக, திடீர் நகர், சாலைமா நகர், சுந்தரம் லேன் வழி, மேனாட் தெரு, பொன்னப்பா தெரு, போலிஸ் குடியிருப்பு, கரும்பு தோட்டம், சரவண பெருமாள் தெரு, ராமசாமி தெரு, வெள்ளாளத் தெரு, லாட்டர்ஸ் கேட், பிளவர்ஸ் ரோடு வழி, நேருபார்க், சாஸ்திரி நகர் நடைபயணம், புல்லாபுரம், பூபதி நகர், ஓசான்குளம் தெரு ஆகிய தெருக்களில் வாக்கு சேகரித்தனர்.

Advertisement

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சருமான சேகர்பாபு மற்றும் பகுதிக் கழகச் செயலாளரும் நியமனக்குழு உறுப்பினருமான சொ.வேலு ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

உடன் எழும்பூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஓ.ஏ.நாகலிங்கம், திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, பகுதி திமுக செயலாளர் வி.சுதாகர், திமுக அயலக அணி துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான பரிதி இளம்சுருதி, வட்டக் கழகச் செயலாளர் சி.சேகர், கூட்டணிக் கட்சித் தோழர்கள் மற்றும் திமுக முன்னணியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News