காட்டாங்குளத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரிப்பு.

Update: 2024-04-10 09:27 GMT
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆப்பூர்,பழவேலி, ஆலாப்பாக்கம், மேலமையூர், திம்மாவரம், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட 27 -க்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் தலைமையில், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் ஆகியோருடன் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு காஞ்சி நாடாளுமன்ற வேட்பாளர் க.செல்வம் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இப்பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள்,காட்டாங்குளத்தூர் தெற்கு,வடக்கு ஒன்றிய நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள்,வார்டு உறுப்பினர்கள், திமுக மாவட்ட,ஒன்றிய குழு நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
Tags:    

Similar News