வாக்கு எண்ணிக்கை: தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி

தூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி நடந்தது.;

Update: 2024-05-23 14:50 GMT

பயிற்சியில் கலந்து கொண்ட அதிகாரிகள்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 19-ந் தேதி நடந்தது. இதில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டு உள்ளன.

அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மையம் முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி நடக்கிறது.

Advertisement

இதற்காக 109 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 116 உதவியாளர்கள், 124 நுண் பார்வையாளர்கள் ஆக மொத்தம் 349 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் விதிகளின்படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான லட்சுமிபதி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News