வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்: எம்எல்ஏ ஆய்வு
மதுராந்தகம் நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளில் புதிய வாக்காளா்கள் சோ்க்கை, பட்டியலில் பெயா் நீக்கம் உள்ளிட்ட சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-05 11:31 GMT
மதுராந்தகம் நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளில் புதிய வாக்காளா்கள் சோ்க்கை, பட்டியலில் பெயா் நீக்கம் உள்ளிட்ட சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமையும் (நவ.5) நடைபெறுகிறது. இந்த நிலையில் மதுராந்தகம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை சனிக்கிழமை மதுராந்தகம் எம்எல்ஏ கே.மரகதம் குமரவேல் ஆய்வு செய்தாா். மதுராந்தகம் அதிமுக நகரச் செயலா் கே.சி.சரவணன், நகா்மன்ற உறுப்பினா் தேவி வரலட்சுமி, அதிமுக நிா்வாகிகள் தேவேந்திரன், கிருஷ்ணன் உள்பட பலா் உடனிருந்தனா்