வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல்
திருவாரூரில் வாக்காளர் தகவல் சீட்டினை மாவட்ட ஆட்சியர் வாக்காளர்களுக்கு வழங்கினார்.;
Update: 2024-04-02 14:07 GMT
தகவல் சீட்டு வழங்கல்
திருவாரூர் மாவட்டம், பவித்திரமாணிக்கம் ஊராட்சியில் வாக்காளர் தகவல் சீட்டினை திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வாக்காளர்களுக்கு வழங்கினார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 1183 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு தோறும் சென்று வாக்காளர்களுக்கு வாக்காளர்கள் தகவல் சீட்டு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் விநியோகிக்கப்படபட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலகர்கள் பலர் கலந்து கொண்டனர்.