விருத்தாசலம்: ஒரே நாளில் 1104 மூட்டை குவிந்தது
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று ஒரே நாளில் 1104 தானிய மூட்டைகள் குவிந்தன.
Update: 2024-05-14 02:20 GMT
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் 13 ஆம் தேதிமணிலா வரத்து 50 மூட்டை, எள் வரத்து 700 மூட்டை, நெல் வரத்து 150 மூட்டை, உளுந்து வரத்து 70 மூட்டை, பச்சை பயிர் வரத்து 1 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 10 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 10 மூட்டை, வரகு வரத்து 70 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 10 மூட்டை, நரிபயிறு வரத்து 3 மூட்டை என மொத்தம் 1104 மூட்டை குவிந்தது.