தாராபுரம் அருகே மதுபான கடை அகற்றக் கோரி காத்திருப்பு போராட்டம்

குண்டடம் ஒன்றியம் மோளரப்பட்டி ஊராட்சி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-03-07 05:48 GMT

தேர்பாதை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுபான கடை அகற்ற வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இந்த பகுதிக்கு வருகை புரிந்த போது பொதுமக்கள் அமைச்சரை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனை தொடர்ந்து அமைச்சர் இந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி தருகிறேன் என உத்தரவளித்ததின் பேரில் அப்போது பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேர் பாதையில் உள்ள 3830 என்ற மதுபான கடை அகற்ற அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவின் அடிப்படையில் இந்த கடை மோளரபட்டி என்ற கிராமத்தில் அமைவதற்கு தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது .

இதனை தொடர்ந்து மோளரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு எங்களது பகுதிக்கு மதுபான கடை வேண்டாம் எனக்கோரி இரவு நேரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . தொடர்ந்து நேற்று தேர்பாதை என்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுபான கடையை திறக்க விடாமலும் உடனடியாக மதுபான கடையை அகற்ற வேண்டும் என கூறி வருகின்றனர் .

அரசு உத்தரவு வந்த பின்பும் மதுபான கடையை அகற்றாமல் காலம் தாழ்த்தி வருவது வருத்தம் அளிப்பதாகவும் இந்த கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறி சுமார் 6 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் கோவிந்தசாமி தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மதுபான கடையை அப்புறப்படுத்தாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆறு மணி நேரமாக 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags:    

Similar News