செய்யாறில் மணப்பெண் கடத்தப்பட்டாரா?: போலீசார் விசாரணை

செய்யாறில் மணப்பெண் கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Update: 2024-01-22 15:41 GMT

காவல் நிலையம் 

செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம் பெண். இவர் செங்கல்பட் டில் உள்ள தனியார் கம் பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவரது திருமணம் 22ம் தேதியான இன்று நடைபெற இருந்தது. இதற்கான ஏற் பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் மாலை வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது பெற்றோர், செய்யாறு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண்ணை யாராவது கடத்திச்சென்றார்களா? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News