முட்டல் நீர்வீழ்ச்சியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர்

ஆத்தூர் அருகே கல்லாநத்தம் முட்டல் நீர்வீழ்ச்சியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2024-05-16 03:42 GMT

ஆத்தூர் அருகே கல்லாநத்தம் முட்டல் நீர்வீழ்ச்சியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன் மலை தொடர்ச்சியின் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது இந்தப் பகுதியை வனத்துறையினர் சுற்றுலாத்தலமாக பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வந்த நிலையில் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குறைந்து வறண்டு காணப்பட்டு வந்தது . மேலும் நீர் வரத்து இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் லேசான மற்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் முட்டல் நீர்வீழ்ச்சியில் தற்போது நீர்வரத்து வரத் தொடங்கியது இதனால் முட்டல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதனால் நீர்வீழ்ச்சி பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags:    

Similar News