உதகை சுற்றுப்பகுதிகளில் நீர் பனிக்காலம்.

உதகை சுற்றுப் பகுதிகளில் நீர் பனிக்காலம் துவங்கியது

Update: 2023-12-07 06:12 GMT

உதகை சுற்றுப்பகுதிகளில் நீர்ப்பனிக் காலம் துவங்கியது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நீலகிரி மாவட்டத்தில் மிக் ஜாம் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வந்தது. இதனால் பனிப்பொழிவு இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை உதகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நீர்ப்பனிக் காலம் துவங்கியது. குறிப்பாக புற்கள் மீது விழுந்திருந்த நீர்ப்பனி முத்து முத்தாய் காணப்பட்டது. அதேபோல் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் நீர்ப்பனி அதிக அளவில் கொட்டியிருந்தது. தற்போது நீர் பனி துவங்கி உள்ள நிலையில் விரைவில் உறைபனி காலம் துவங்கும் என்பதால் கடும் குளிர் நிலவும் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News