சாய ஆலைகளுக்கு தண்ணீரின் அளவு: டிஜிட்டல் மீட்டர் பொருத்த கோரிக்கை
சாய ஆலைகள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவை கண்டறிய டிஜிட்டல் மீட்டர் பொருத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இதில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் S.ஜெயக்குமார் கலந்து கொண்டனர்.சிப்காட்டில் இயங்கி வரும் சாய ஆலைகள் தாங்கள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவை கண்டறிய டிஜிட்டல் மீட்டர் பொருத்த வேண்டும் எனவும் இதற்காக 15 நாள் கால அவகாசம் வழங்கப்படுகிறது
எனவும் தெரிவித்தார். அவ்வாறு டிஜிட்டல் மீட்டர் பொருத்தாத ஆலைகளுக்கு தண்ணீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். விதிமுறைகளை மீறிய ஆலைகள் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்து சீல் வைக்கப்பட்ட நிலையில் கடந்த 100 நாட்களாக போராடிய மக்களுக்கோ, சட்டமன்ற உறுப்பினருக்கோ தெரிவிக்காமல் ஆலைகள் செயல்பட ஆரம்பித்துள்ளது.
நல்லா ஓடையில் ஒரு சொட்டு கூட தண்ணீர் வெளிவிடப்படாத நிலை வரும் வரை பூட்டிய ஆலைகளை திறக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது தற்போது பூட்டிய நிலையில் உள்ள ஆலைகளை அரசு திறக்குமேயானால் மாபெரும் போராட்டத்தை நடத்த தயாராக உள்ளதாக பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்தார்.