சேலம் மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகரிப்பு !

திருவண்ணாமலை, கடலூர், அரூர் உள்பட பல பகுதிகளில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2024-02-23 09:33 GMT

தர்பூசணி 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி இறுதி வாரத்தில் தொடங்கி மே மாதம் வரை தர்பூசணி வரத்து இருக்கும். தமிழகத்தில் திருவண்ணாமலை, அரூர், செங்கம், ஆரணி, தர்மபுரி, கடலூர் உள்பட பகுதிகளில் தர்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல் கர்நாடக மாநிலத்தில் மைசூர் உள்பட பல பகுதிகளில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தர்பூசணி சீசன் களைக்கட்டியுள்ளதால் திருவண்ணாமலை, கடலூர், அரூர் உள்பட பல பகுதிகளில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இது குறித்து சேலம் தர்பூசணி மொத்த வியாபாரிகள் கூறுகையில்,தமிழகம் மற்றும் கர்நாடகாவில் தர்பூசணி அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் தர்பூசணி தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், வடமாநிலங்களுக்கும் அதிகளவில் விற்பனைக்கு அனுப்புகிறது. தற்போது திருவண்ணாமலை, கடலூர் சீசன் களைக்கட்டியுள்ளது. அங்கிருந்து லாரிகள் மூலம் தர்பூசணி சேலம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு சில்லரை வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். ஒரு கிலோ ரூ.20 என விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
Tags:    

Similar News