சவுக்கு சங்கருக்கு போராடி சிகிச்சை பெற்றுள்ளோம்: வக்கீல்

சிறையில் சவுக்கு சங்கர் தாக்கபட்டது உறுதியாகி உள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-05-09 15:54 GMT

வழக்கறிஞர் பாலகிருஷ்ணன்

கோவை நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் நீதிமன்ற உத்தரவின் படி சவுக்கு சங்கருக்கு கோவை அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும் சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டதாக கூறிய அவர்,

சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி கோவை அரசு மருத்துவமனையில் இன்று கைக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement

அதில் கையில் இரண்டு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது தெரியவந்ததை தொடர்ந்து சவுக்கு சங்கருக்கு மாவு கட்டு போடபட்டுள்ளது எனவும் மருத்துவ சிகிச்சைக்கு பின்பு தான் மன அழுத்ததில் இருந்து வெளியே வந்துள்ளதாக சவுக்கு சங்கர் கூறியதாக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தற்போது சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது உறுதியாக உள்ளது எனவும் சிட்டி சைபர் கிரைம் போலீசார் காவலில் எடுப்பதாக மனு அளித்த இருந்த நிலையில் அதை பின் வாங்கி உள்ளனர் எனவும் திங்கட்கிழமை மீண்டும் சிகிச்சைகாக அரசு மருத்துவமனைக்கு சவுக்கு சங்கர் அழைத்து வர வேண்டும்.அதே போன்று நீதிமன்ற காவல் மனுவும் திங்கள் அன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.ஐந்து வழக்குகளில் கைது செய்யப்பட்டதாக சிறையில் உள்ள சவுக்கு சங்கரிடம் ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்றவர் சவுக்கு சங்கருக்கு போராடி சிகிச்சை பெற்று உள்ளதாகவும் வலது கையில் ஏற்பட்டுள்ள விரிசல் தான் சிறைக்கு சென்ற பின் ஏற்பட்டதாகவும்,

தேனியில் அதிகாலை 1.30 மணிக்கு சவுக்கு சங்கரை கைது செய்த நிலையில் காலை 8 மணிக்கு மேல் தான் கஞ்சா வைத்திருந்தாக வழக்கு பதியப்பட்டுள்ளது என்றவர் ரொம்ப மெனக்கிட்டு போலீசார் கஞ்சா வழக்கு போட்டுள்ளனர் என தெரிவித்தார்.

கஞ்சா வழக்கு பொய் வழக்கு என நிரூபிக்க முடியும் சவுக்கு சங்கர் கூறியதாவும் அதற்கான ஆதாரங்களை அவர் வைத்துள்ளதாகவும் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags:    

Similar News