நூலகம், விலையில்லா உணவகம் வேண்டும் !
கிருஷ்ணகிரியில் நூலகம், விலையில்லா உணவகம் அமைக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் நூலகம், விலையில்லா உணவகம் அமைக்க தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் தீர்மானம் கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரியில் நூலகம் மற்றும் விலையில்லா உணவகம் அமைக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தின் நகர நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில், பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் வழிக்காட்டுதலின்படி கிருஷ்ணகிரியில் நகர தமிழக வெற்றிக் கழக அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் சசிக்குமார் தலைமை வகித்தார். நகர நிர்வாகி வழக்கறிஞர் ரோஷன்(எ)முகந்த் வரவேற்றார். நகர நிர்வாகிகள் சதீஷ்குமார், சீனிவாசன், முரளி, சுரேஷ், மஞ்சு, மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் வடிவேல், செயலாளர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதில், 100&க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், எழுதுபொருட்களும், 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு விலையில்லா புடவை, வேட்டிகள், தென்னங்கன்றுகள் வழங்கினர். தொடர்ந்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர், நடந்த ஆலோசனை கூட்டத்தில், நகராட்சியில் 33 வார்டுகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைகள் திறக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும். நகரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக நூலகம் மற்றும் விலையில்லா உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரி & பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுங்கச்சாவடியை அகற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் தாமோதரன், வினோத், ரத்தினவேல், பர்கூர் குஷிசிவா, வேப்பனப்பள்ளி பாக்கியராஜ், சூளகிரி லோகேஷ், மேற்கு மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர ஆலோசகர் ராம் நன்றி கூறினார்.