செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியருக்கு வரவேற்பு நிகழ்ச்சி
செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியருக்கு வரவேற்பு நிகழ்ச்சி, அமைச்சர் பங்கேற்பு;
Update: 2024-01-30 05:08 GMT
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ராகுல்நாத் அவர்களுக்கு பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சி மற்றும் புதிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். உடன் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ் .பாலாஜி மற்றும் ஒன்றிய செயலாளர், நகர மன்ற தலைவர்கள் ,காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர், மேயர் ,ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், திமுக நிர்வாகிகள், என பலரும் கலந்து கொண்டனர்.