திமுக இளைஞரணி இருசக்கர வாகன பேரணிக்கு ஓமலூரில் வரவேற்பு
சேலத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதியன்று 2வது திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளது இந்த மாநாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாகவும், நீட் தேர்வு விலக்கு கோரியும் திமுக சார்பில் இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரியில் தொடங்கியது. அப்படி தொடங்கிய பேரணியில் 188 இருசக்கர வாகனங்கள் பங்குபெற்று 234 சட்டமன்ற தொகுதிகளில் 504 பிரச்சார மையத்திற்கும் சென்று வர உள்ளது.
அதன்படி நேற்று காலை தாரமங்கலத்திற்கு வந்த பேரணிக்கு தாரமங்கலம் திமுக நகர செயலாளர் குணசேகரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல் நேற்று இரவு சுமார் ஆறு மணியளவில் ஓமலூருக்கு இருசக்கர வாகன பேரணி வந்தடைந்தது. இதில் சேலம் மத்திய மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜேந்திரன் இருசக்கர வாகன பேரணிக்கு மலர் தூவி சிறப்பான வரவேற்பு அளித்தார்.பின்னர் கொடியசைத்து அந்த வாகன பேரணியை வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஓமலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஓமலூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி பொறுப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.