பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு!
யாத்திரை முடிந்து ராமேஸ்வரத்தில் இருந்து தேவகோட்டை வழியாக நேற்று முன்தினம் பொன்னமராவதி வலைய பட்டி வந்தனர். அவர்களுக்கு வலையபட்டி, புதுப்பட்டி நகரத்தார் மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.
Update: 2024-06-25 11:56 GMT
பொன்னமராவதி: மக்கள் நலனுக்காக வும், அமைதி நிலவ வேண்டியும் பொன்னமராவதியை அடுத்த வலையபட்டி பச்சைகாவடி குழுவினர் ராமேஸ்வரத்தில் இருந்து வாரணாசி, அயோத்திக்கு யாத்திரை சென்றனர். 13வது முறையாக யாத்திரை சென்ற குழுவில் வலைய பட்டி, சிவகங்கை, காரைக்குடி, குழி பிறை, சீனமங்கலம், சென்னை, திருச்சி, உட்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த 33 பேர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் யாத்திரை முடிந்து ராமேஸ்வரத்தில் இருந்து தேவகோட்டை வழியாக நேற்று முன்தினம் பொன்னமராவதி வலைய பட்டி வந்தனர். அவர்களுக்கு வலையபட்டி, புதுப்பட்டி நகரத்தார் மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.