தேசியளவிலான ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு 

ஜம்மு - காஷ்மீரில் நடந்த தேசியளவிலான ஓட்டப்பந்தயத்தில், தங்கப்பதக்கம் வென்ற தஞ்சாவூர் மாவட்டம், நவலூர் மாணவி சுவேதாவுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2024-06-20 05:33 GMT

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் ஓட்டப்பந்தயத்தில், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், வெண்டையம்பட்டி ஊராட்சி, நவலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சுவேதா தங்கப்பதக்கம் வென்றார். 

மாணவி ஸ்வேதா திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் கடந்த ஜூன் 11, 12, 13-ஆம் தேதிகளில் நடைபெற்ற தேசிய அளவிலான, ஜூனியர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.  இதன் மூலம் இவர் நேபாளத்தில் விரைவில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  பதக்கம் வென்ற பிறகு செவ்வாய்க்கிழமை சொந்த ஊருக்கு வந்த சுவேதாவை, சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் சால்வை, மாலை அணிவித்து வரவேற்றனர்.  மாணவி சுவேதா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளைச் செயலாளர் ப.ஜெய்சங்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News