மகளிர் தினத்தை முன்னிட்டு மகிளா காங்கிரஸ் சார்பில் நலதிட்ட உதவிகள்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் விருதுநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி கவிதா தலைமையில் நடைபெற்றது. இதில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் லட்சுமணன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் அவர்கள் பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவகாசி நகர தலைவர் சேர்மத்துரை, சிவகாசி முன்னாள் நகர் தலைவர் குமரன், மாவட்ட துணை தலைவர் அய்யனார், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.