மேல்மலையனூர் அருகே 512 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
மேல்மலையனூர் அருகே 512 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பயனாளிக ளுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மேல்மலையனூர் தாலுகா வளத்தியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் கண் மணி நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார்.
தாசில்தார் முகமது அலி வரவேற்றார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 512 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 53 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தையல் எந்திரங் கள் ஆகியவற்றை வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திண்டிவனம் சப்-கலெக்டர் திவ்யான்சு நிகம், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்பிரமணியன், செல்வி ராம சரவணன், கவுன்சிலர்கள், சமூக பாதுகாப்பு திட்ட துணை தாசில்தார் செல்வகுமார், மண்டல துணை தாசில்தார் சித்தார்த்தன், வட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன், வருவாய் ஆய்வாளர்கள் நேரு அரிகிருஷ்ணன் பாஸ்கரன், என பலர் கலந்து கொண்டனர்.