எடப்பாடியில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

எடப்பாடியில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Update: 2023-12-19 17:40 GMT
தமிழக முழுவதும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்  தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் வேளாண்மை துறை சார்பாக விவசாயிகளுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை வழங்கி முகாம்களை நடத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டார வேளாண்மை துறை சார்பாக எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் ஆவணி பேரூர் கீழ் முகம் ஊராட்சியில் விவசாயிகளுக்கான வேளாண்மை துறை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் விவசாயிகளுக்கான பயிர் வகை மற்றும் வேளாண்மை துறை மூலம் வழங்கக்கூடிய நலத்திட்ட உதவிகள் மற்றும் பயிர்களின் வளர்ப்பு முறைகளை குறித்து வேளாண்மை துறை உதவி இயக்குனர் மணிவாசகம் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். மேலும் முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு உதவித்தொகை மற்றும் பயிர்களுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மணி, வேளாண்மை துணை அலுவலர்கள் முருகேசன், வேளாண்மை அலுவலர் கவிபாரதி, உதவி வேளாண்மை அலுவலர் கலைமணி, தொழில்நுட்ப மேலாளர் தனணி, உதவி தொழில் நுட்ப மேலாளர் மோகன்ராஜ்,பவுல்ராஜ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News