மாற்று திறனாளிகளிகலுக்கு நலத்திட்ட உதவி

திருப்பத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், 14 மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Update: 2024-01-23 10:16 GMT

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 14 மாற்று திறனாளிகளுக்கு சுமார் 5லட்சம் மதிப்பீட்டில் உதவி உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

  திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில்பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் திருப்பத்தூர், வாணியம்பாடி, உதயேந்திரம் மாற்றுஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 14 மாற்றுதிறனாளிகளுக்கு சுமார்5லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் மோட்டார் பொருந்தியதையல் மிஷின், பேட்டரில் இயங்கக்கூடிய சக்கர நாற்காலி, செயற்கை கால்,மானியத்தில் வங்கிக் கடன்,கைபேசி ,மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள14 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார் இறுதியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மாற்று திறனாளிகளின் உடன் அமர்ந்து மத்திய உணவு உட்கொண்டார் இந்த நிகழ்ச்சியில்முட நீக்கு வல்லுநர் இணியன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News