அதிமுக நிகழ்வில் பெண்கள் மயக்கம்
திருச்சி அண்ணா சிலை அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பெண்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது;
By : King News 24x7
Update: 2024-03-10 13:16 GMT
பெண்கள் மயக்கம்
பெண்கள் மயக்கம்
பெண்கள் மயக்கம்
திருச்சி அண்ணா சிலை அருகே அதிமுக சார்பில் மறைந்த அதிமுக நிர்வாகியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தற்போது, திருச்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெயிலால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வரமுடியாமல் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் எந்த வித முன்னேற்பாடுகள் இன்றி சுமார் 11 மணி அளவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு பெண் முண்டியடித்து கொண்டு சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த ஒருசில காவலர்களால் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதன் காரணமாக சில பெண்கள் மயக்கமடைந்தனர்.