வேப்பங்குளக்கரை சாலை சேதம்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

குளக்கரை ஒட்டியுள்ள பகுதியில் சிமென்ட் சாலை பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளதால் வாகன் ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர்.

Update: 2024-02-08 14:16 GMT

 குளக்கரை ஒட்டியுள்ள பகுதியில் சிமென்ட் சாலை பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளதால் வாகன் ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர்.

"காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் இருந்து மாமல்லன் நகர், மின் நகர், ரயில் நிலையம், அரசு மருத்துவமனைக்கு செல்வோர் திருக்காலிமேடு, சின்ன வேப்பங்குளத்தை ஒட்டியுள்ள மேற்கு பகுதி சாலை வழியாக சென்று வருகின்றனர். பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லுாரி மாணவ- - மாணவியர் அதிகளவு செல்லும் சாலையில், குளக்கரை ஒட்டியுள்ள பகுதியில் சிமென்ட் சாலை பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை சேதமடைந்த பகுதியில் நிலைதடுமாறி, தடுப்புச் சுவர் இல்லாத குளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்."
Tags:    

Similar News